தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015
வகை 4 புதுக் கவிதைப் போட்டி
இமைகள் இல்லா விழிகள்
மழை நீர் மாசுபட்டால்
பயிர்களின் உயிர்மை
பறிபோகும்
இமைகள் இல்லா விழிகள்
பார்வையை இழக்கும்
உமிழும் எச்சில்
கடவுளுருவாய்
காட்சி தந்தாலும்
வணக்கத்திற்குரியதாய்
அது ஏற்கப்படாது
கடையாணி இல்லா
வண்டிப் பயணம்
களிப்பைத் தராது
பளபளக்கும் பட்டாடைகள்
செத்தப் பூச்சிகளின்
சாபத்தையே தாங்கி நிற்கும்
கொள்ளை பணத்தில்
கோவில் கட்டினால்
கற்சிலைகள் இருக்கும்
கடவுள் இருக்காது
பண்புகள் இல்லா
நாட்டின் வளர்ச்சி
பண மேடாகி
அமைதியை இழக்கும்!
இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல. முடிவு வெளி வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் -- கொ.வை.அரங்கநாதன்
போட்டியில் வெற்றி பெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
ReplyDeleteகவிதை நன்று- வென்றிட வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
ReplyDeleteஇந்த கவிதையும் அருமை --வெற்றி நிச்சயம்--சரஸ்வதிராசேந்திரன்
ReplyDeleteதங்கள் வாழ்த்து பலிக்கட்டும் !
ReplyDeleteதங்கள் வாழ்த்து பலிக்கட்டும் !
ReplyDeleteஅருமையான கவிதை! வாழ்த்துக்கள் நன்றி!
ReplyDeleteநன்றி!
ReplyDelete