தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015
வகை 4 புதுக் கவிதைப் போட்டிபுரையோடிய புற்று நோய்
காலில் செருப்பின்றி
மர நிழல்களை குடைகளாக்கி
பள்ளிச் சென்ற காலமெல்லாம்
பழங்கதையாகிவிட்டது
வணிகமய வாழ்வில்
நிசான் காரில்
வாழ்க்கைப் பறக்கிறது
அன்று
தெருவோர ஏழைக்கு
மதிய உணவை
மனமுவந்து அளித்ததும்
மற்றவர்க்கு உதவும்போது
ஏற்படும் மகிழ்வும்
இயல்பாய் இருந்தது
இன்றோ
இரக்கத்தோடு
உறக்கத்தையும் மறந்த
இலக்கில்லா ஓட்டமொன்று
எல்லாவற்றையும் தொலைத்தது
ஜோடிக்கப்பட்ட மேடையில்
ஆடம்பரப் பேச்சோடு
முதியோருக்கு நிவாரணம்
சொந்தத் தாயும் தந்தையுமோ
முதியோர் இல்லத்தில்
இப்படி
ஏய்த்துப் பிழைப்பவர்க்கே
சமூக அங்கீகாரமென்றால்
நம்முடைய வளர்ச்சி
புரையோடிப் போன
புற்று நோயை ஒக்கும்!
இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைஅ கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல. முடிவு வெளி
வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் -- கொ.வை.அரங்கநாதன்
உண்மை பேசுகிற கவிதை!!
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் அய்யா!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
ReplyDeleteஅருமை வென்றிட வாழ்த்துகிறேன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
ReplyDeleteமனம் வைத்து நாமுழைத்தால் மாறும் எல்லாம்.
ReplyDeleteகவிதை நன்று. வெற்றிபெற வாழ்த்துகள்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ReplyDeleteசூப்பர் சூப்பர் ஐந்தில் ஒன்று நிச்சயம்=சரஸ்வதிராசேந்திரன்
ReplyDeleteதங்கள் வாழ்த்து பலிக்கட்டும் !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅய்யா அருமையான கவி வரிகள் உண்மையே வாழ்த்துக்கள்! நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDelete