வாய்மையே வெல்லும்
அந்த நம்பிக்கையில்தான் உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது
Thursday, October 1, 2015
Wednesday, September 30, 2015
உணர்வது எப்போது
தமிழ்
வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு
அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015
வகை 4 புதுக் கவிதைப் போட்டி
உணர்வது எப்போது
தன் வயிறு காய்ந்தாலும்
இயலாதவர்க்கு
இயன்றதை செய்யும்
எம் தமிழர் பண்பாடு
எங்கே போனது
குடும்பங்களை இணைத்து
குதுகலித்தத் திருமணங்கள்
நீதி மன்ற வாயிலில்
நித்தம் மிதிபடுவதேன்
பசுவிற்கும் புறாவிற்கும்
நீதி தந்த எம் நெறிமுறை
பணத்திற்குள் கரைந்து
பாழானது எவ்வாறு
வள்ளலாரையே
சந்தேகித்த ஆன்மீகம்
போலிச் சாமியார்களுக்கு
புகலிடமானது ஏன்
ஏழைக்கு எழுத்தறிவித்தல்
இறைப் பணியே என்ற நாம்
கல்வியை காசாக்கும்
கலாச்சாரத்தை எங்கு கற்றோம்
பண்பில்லா முன்னேற்றம்
பம்பர வாழ்க்கையாகி
தள்ளாடிச் சுற்றி
தானே கவிழும் என்பதை
என்று நாம் உணரப்போகிறோம்
இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைஅ கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல. முடிவு வெளி வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் --கொ.வை.அரங்கநாதன்
Monday, September 21, 2015
நாகரீக வேஷங்கள்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015
வகை 4 புதுக் கவிதைப் போட்டி
நாகரீக வேஷங்கள்
கிழிந்த ஜீன்ஸும்
குறைந்த ஆடையும்
நுனி நாக்கு ஆங்கிலமும்
நுகர்வோர் கலாச்சாரமும்
வளர்ந்து விட்டதற்கு
சாட்சியாக வைக்கப்படுகிறது
பட்டப்பகலாயிருந்தும்
கழுத்தில் நகையுடன்
ஆண்களால் கூட
நடமாட முடியவில்லை
பேருந்துகளிலும்
அலுவலகங்களிலும்
அகப் புறத் தாக்குதலுக்கு
ஆளாகின்றனர் பெண்கள்
சமூகப்பற்றோ தேசப்பற்றோ
எதுவுமின்றி நடக்கும்
அரசியல் அடவடிகள்
ஆட்டோக்கள் முதல்
கல்விச்சாலைகள் வரை
கைகளில் வைத்திருக்கும்
தாதாக்களின் தனி ராஜ்யம்
பண்பாடில்லா இச்சமூகத்தில்
வானுயர் கட்டிடங்களையும்
வணிகமயமாக்கலையும்
நாகரீக வேஷங்களையும்
முன்னேற்றத்தின் குறியீடாய்
எப்படி முன்வைக்க முடியும்?
இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைஅ கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல. முடிவு வெளி வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் --கொ.வை.அரங்கநாதன்
Saturday, September 19, 2015
இமைகள் இல்லா விழிகள்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015
வகை 4 புதுக் கவிதைப் போட்டி
இமைகள் இல்லா விழிகள்
மழை நீர் மாசுபட்டால்
பயிர்களின் உயிர்மை
பறிபோகும்
இமைகள் இல்லா விழிகள்
பார்வையை இழக்கும்
உமிழும் எச்சில்
கடவுளுருவாய்
காட்சி தந்தாலும்
வணக்கத்திற்குரியதாய்
அது ஏற்கப்படாது
கடையாணி இல்லா
வண்டிப் பயணம்
களிப்பைத் தராது
பளபளக்கும் பட்டாடைகள்
செத்தப் பூச்சிகளின்
சாபத்தையே தாங்கி நிற்கும்
கொள்ளை பணத்தில்
கோவில் கட்டினால்
கற்சிலைகள் இருக்கும்
கடவுள் இருக்காது
பண்புகள் இல்லா
நாட்டின் வளர்ச்சி
பண மேடாகி
அமைதியை இழக்கும்!
இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல. முடிவு வெளி வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் -- கொ.வை.அரங்கநாதன்
Friday, September 18, 2015
புரையோடிய புற்று நோய்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015
வகை 4 புதுக் கவிதைப் போட்டிபுரையோடிய புற்று நோய்
காலில் செருப்பின்றி
மர நிழல்களை குடைகளாக்கி
பள்ளிச் சென்ற காலமெல்லாம்
பழங்கதையாகிவிட்டது
வணிகமய வாழ்வில்
நிசான் காரில்
வாழ்க்கைப் பறக்கிறது
அன்று
தெருவோர ஏழைக்கு
மதிய உணவை
மனமுவந்து அளித்ததும்
மற்றவர்க்கு உதவும்போது
ஏற்படும் மகிழ்வும்
இயல்பாய் இருந்தது
இன்றோ
இரக்கத்தோடு
உறக்கத்தையும் மறந்த
இலக்கில்லா ஓட்டமொன்று
எல்லாவற்றையும் தொலைத்தது
ஜோடிக்கப்பட்ட மேடையில்
ஆடம்பரப் பேச்சோடு
முதியோருக்கு நிவாரணம்
சொந்தத் தாயும் தந்தையுமோ
முதியோர் இல்லத்தில்
இப்படி
ஏய்த்துப் பிழைப்பவர்க்கே
சமூக அங்கீகாரமென்றால்
நம்முடைய வளர்ச்சி
புரையோடிப் போன
புற்று நோயை ஒக்கும்!
இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைஅ கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல. முடிவு வெளி
வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் -- கொ.வை.அரங்கநாதன்
வேர்களில் விஷம் வார்த்தால்....
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015
வகை 4 புதுக் கவிதைப் போட்டிவேர்களில் விஷம் வார்த்தால்....
விண் வெளியை உழுது
வயல்களாக்கி
பெருங்கடல்களை தூர்த்து
மனைகளாக்கி
பெருமைப்படலாம்
ஆனால்
முன்னேற்றத்தின்
மறு பக்கத்தில்
பண்பை இழந்த மனிதம்
பரிதவித்துக் கொண்டிருக்கிறது
நட்பு கருணை ஈகை
ஒழுக்கம் உண்மை அன்பு
இவையெல்லாம்
காலாவதியான சொற்களாய்
அறிவிக்கப்பட்டு
காமம் துரோகம் களவு
கொலை கொள்ளை ஏய்த்தல்
இவையே வளர்ச்சியின் வழியாய்
முன்மொழியப்படுகிறது
பண்பில்லா வளர்ச்சி
சாக்கடையில் கலந்த
சந்தனமாகிவிட்டது
வேர்களுக்கு
விஷம் வார்த்தால்
விழுதுகள் என்ன
அமுதமாப் பொழியும் ?
இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல. முடிவு வெளி வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் -
Subscribe to:
Posts (Atom)